Latest

15/recent/ticker-posts

ஒற்றை நாற்று நடவு முறை

 ஒற்றை நாற்று நடவு முறையில்   கூடுதல் மகசூல் பெற அறிவுரை


ஒற்றை நாற்று நடவு🌾🌱

    
Srs method, ஒற்றை நாற்று நடவு

   
இரசாயன உரங்கள் பயன்படுத்தினால் மட்டுமே அமோக விளைச்சல் ஏற்படும் என்ற நிலை மாறிவிட்டது.

       மடகாஸ்கர் விவசாயிகள் ஒற்றை நாற்று நடவு மூலம் ஏக்கருக்கு 8 டன் நெல் விளைச்சல் எடுத்துள்ள செய்தியை அமெரிக்க விஞ்ஞானி நார்மன் ஒப்போ உலகம் முழுவதும் பரப்பி விட்டார்.

   ஒற்றை நாற்று நடவு செய்ய அடிப்படையான 6 செய்முறைகள் பின்வருமாறு 🌾🌱👇👇👍👇👇

 🌾1. குறைந்த விதை : 

     
        ஒரு ஏக்கர் நடவு செய்ய கால் கிலோ விதை போதுமானது என்று ஆலங்குடி பெருமாள் நிரூபித்துள்ளார் . அவர அரை மீட்டர் இடைவெளி கொடுத்து நடவு செய்கிறார் . ஓர் அடி இடைவெளி கொடுத்து நடவு செய்வதற்கு 1.5 கிலோ நெல் விதை போதுமானது.

 

 🌾2. மேட்டுப்பாத்தி 


          ஒரு ஓர் சென்ட் நிலத்தில் நிறைய தொழு உரமிட்டு வடிகால் வசதியுடன் கூடிய பாத்தி அமைக்க வேண்டும் மூன்றாம் கொம்பு விதையை விதைத்து வைக்கோல் துண்டுகள் மரத்துண்டு அல்லது தேங்காய் நார்க்கழிவு கொண்டு மூடி பூவாளியால் நீர் விடவேண்டும்.

 🌾3. குறைந்த வயது நாற்று 


      இளம் நாற்று அதிக கிளை வளர்கிறது.நாட்டை 15 நாட்களுக்குள் பெயர்த்து நடவேண்டும் என்று பரவலாக பேசி வருகின்றோம் .24 நாட்களுக்கு மேல் பெய்து மட்டும் ஏக்கருக்கு நான்கு டன் நெல் விளைச்சல் எடுத்தவர்கள் இருக்கிறார்கள்.வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் இளம் நாற்று நடவு சாத்தியமில்லை.

 🌾4. ஒற்றை நாற்று நடவு

    
         புதிதாக கேள்வி படுபவர்கள் நம்புவது கடினம் ஒற்றை நாற்று நடவு வயலில் நடவு செய்வது போலவே தோன்றாது பார்ப்பவர்கள் கேலி செய்வார்கள் கலங்கக் கூடாது எவ்வளவு வளம் குறைந்தது 50 முதல் 60 கிளை வெடிக்கிறது நிலமும் வளமும் இருந்து நீரை சரியாக பராமரிக்க முடிந்தால் ஒற்றை நாற்று நடவு செய்து 125 கிளை பார்த்தவர்கள் சாட்சியாக இருக்கிறார்கள் அதனால் ஒற்றை நாற்று நடலாம் 👍🌱🌾🌾.

  🌾5. நீர் பராமரிப்பு


        அதிக விளைச்சலுக்கு மண்ணில் ஈரப்பதமும் காற்றோட்டமும் அடிப்படைத் தேவைகள் அதனால் நீர் பராமரிப்பு இரண்டாவது முக்கியமாக பெறுகிறது. பெரிய நிலமாக இருந்தால் சிறு குறு குண்டுகளாக பிடித்துக் கொள்ளவேண்டும்  .
 
        நிலத்தை நன்றாக சமப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிலத்தில் தாள் கணக்கிற்கு நீ நிறுத்த வேண்டும் முதலீட்டை நீர் காய்ந்து நிலம் வெடிக்கத் தொடங்கிய பின்  நீர்  மீண்டும் பாய்ச்சவேண்டும் . இது பயிர்கிளைத்து வளர தூண்டுகோலாக அமையும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் இது சாத்தியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் 🌱👇.

 🌾6. கருவி கொண்டு இடை உழவு செய்தல் 


      வரிசை வரிசையாக நடவு செய்ய முடியாதவர்கள் இளம் நாற்று நடவு செய்வதை தவிர்க்க வேண்டும் இல்லையெனில் களை எடுப்பது பெரும் சுமையாக முடியும்.

    கேனா களை எடுக்கும் கருவி கொண்டு மூன்று முறை இடை உழவு செய்தால் அதிகமாக விளைச்சல் பெறலாம் .

      ( மார்கர் ) கருவியை வேளாண்துறை மானியமாக தருகிறது . கருவியை பெற வேளாண் அலுவலகத்தை  அணுகி கருவிகளை கேட்டுப்பறலாம் 🌱👍

    🌾🌱 மேலும் இது போன்ற இயற்கை வேளாண்மை முறைகளை அறிந்து கொள்ள வேளாண் வழிகாட்டியை பின்தொடரவும் 🌾🌱🙏🙏🙏

            Dg educate

   நன்றி  🙏   வணக்கம்





 


.